Breaking News

Daily Archives: July 2, 2012

டி.பி.ஐ. முற்றுகை சம்பவம் – கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனே விடுதலை செய்ய வேண்டும்- மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

மனிதநேய மக்கள் கட்சியின் இணை பொது செயலாளர் எஸ்.எஸ். ஹாரூண் ரஷீத் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி இயக்கத்தின் சார்பாக தனியார் கல்விக் கொள்ளைக்கு எதிராக கடந்த 28.06.2012 அன்று சென்னை டி.பி.ஐ.யில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குனரகத்தை முற்றுகையிட சென்ற போராட்டகாரர்களை கலைக்க காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி கண்டிக்கிறது. குழந்தைகள், பெண்கள், மாணவர்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக போரட்டக்காரர்களை தாக்கி இருப்பதும், …

Read More »

விடைபெற்றார் தேர்தல் சீர்திருத்த நாயகன் எஸ்.ஒய்.குரைஷி

மத்திய தேர்தல் ஆணையாளர் எஸ்.ஒய்.குரேஷி, ஜூன் 10ம் நாள் ஓய்வு பெற்றார். 1991ல் மத்திய தேர்தல் ஆணையாளராக டி.என்.சேஷன் வந்தபோதுதான் தேர்தல் ஆணையம் ஒன்று இருப்பதாக வெகுஜனத்துக்கு தெரியவந்தது. அவர் சில சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டு வந்தார். அதில் வாக்காளர் அடையாள அட்டை மிக முக்கியமான ஒன்று. சேஷனுக்குப் பிறகு வந்தவர்களில் எஸ்.ஒய். குரேஷி தான் மக்கள் மனதில் நின்றார்.

Read More »

வடசென்னை – ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரம்

வடசென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி 53வது வட்ட தமுமுக சார்பாக கடந்த 25.05.2012 அன்று ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்விக் கட்டணம் மற்றும் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Read More »

புதுப்பேட்டை பகுதியில் மாபெரும் மருத்துவ பரிசோதனை முகாம்

வட சென்னை மாவட்டம் எக்மோர் பகுதி 61 வது வார்டு புதுபேட்டை பகுதியில் மாபெரும் மருத்துவ பரிசோதனை முகாமை அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் சீனிவாசா மகளிர் மருத்துவ நிலையம் இணைந்து நடத்தியது.

Read More »

அல் அய்ன் மண்டல தமுமுகவின் செயற்குழுக் கூட்டம்

அல் அய்ன் மண்டல தமுமுகவின் செயற்குழுக் கூட்டம் 29-06-2012 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகைக்குப் பின்னர், செனையா வில் சகோதரர் கீழை சிராஜ் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மண்டல தமுமுக துணை செயலாளர் சகோதரர் வடகால் எஸ். புர்ஹானுத்தீன் அவர்கள் தலைமை தாங்கினர்.

Read More »

கல்வி சேவையில் சாதனை படைக்கும் வக்ஃபு வாரியம்

வக்ஃபு சொத்துக்கள் அரசியல்வாதிகளாலும், நிகழ் மனிதர்களாலும் சுரண்டப்படுகின்றன. இந்திய அளவில் ரயில்வேத் துறை மற்றும் ராμஷீத் துறைக்கு அடுத்தபடியாக வக்ஃபு சொத்துக்கள் திரண்ட பெருமதிப்பிலான சொத்துக்களைக் கொண்டதாக விளங்குகிறது. கணக்கற்ற முறையில் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சுரண்டப்பட்டு, சுருட்டப்பட்டு மோசடி செய்யப்படும் நிலை இந்தியாவெங்கும் நிலவுகிறது.

Read More »

காவி தீவிரவாதிகள் தொடர்ந்து ஜாமீனில் வெளிவரும் மர்மம்? நம்பிக்கை இழக்கும் தேசிய புலனாய்வு ஏஜென்சி

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு காவி தீவிரவாதிகளுக்கு நீதிமன்றங்கள் ஜாமீன் வழங்கியது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. படுபயங்கர பாதகங்களை இழைத்தவர்கள், அப்பாவி ஹிந்துக்கள், முஸ்லிம்கள் உள்ளிட்டோரை குண்டுகள் வைத்து கொத்துக் கொத்தாக கொன்றுக் குவித்ததோடு, இந்த வழக்குகளின் உண்மை நிலையைக் கண்டறிவதற்காக செயல்பட்டு வந்த காவி தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை கருமமே கண்ணாக செயல்பட்டு கண்டுபிடித்த நேர்மையான அதிகாரிகளின் பணியினைக் கொச்சைப்படுத்தி, நாட்டுப்பற்றுக் கொண்ட மாவீரன் ஹேமந்த் கர்கரே போன்ற அதிகாரிகளின் …

Read More »