Breaking News

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு – நீதிமன்றத் தடை – பிபிசி தமிழோசைக்கு பேராசிரியர். எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் பேட்டி (ஆடியோ)

இந்திய மத்திய அரசு, மத்திய அரசுப் பணிகளில், மதச்சிறுபான்மையினரில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 4.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பித்த உத்தரவை, ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றம் நேற்று ரத்து செய்திருக்கிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தக்கூடிய தரவுகள் பெறப்படவில்லை என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஆனால் இதற்கு முன்னர் , தமிழகத்தில் , முந்தைய திமுக அரசு, தமிழக அரசின் வேலையிடங்களில், பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்டிருந்த 30 சதவீத இட ஒதுக்கீட்டில், இஸ்லாமியர் மற்றும் கிறித்தவர்களுக்கு தலா 3.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி உத்தரவை பிறப்பித்திருந்த்து. இந்த உத்தரவு இன்னும் அமலில் இருக்கிறது. இந்த நிலையில், மத்திய அரசின் இந்த உத்தரவுக்கும், தமிழக அரசு முன்பு பிறப்பிந்திருந்த உத்தரவுக்கும் இடையே என்ன வேறுபாடுகள் இருக்கின்றன என்று, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சட்ட மன்ற உறுப்பினர் ஜவாஹிருல்லாஹ் அவர்களிடம் கேட்டபோது, தமிழக அரசு, இந்த உத்தரவைப் பிறப்பிக்கும் முன்னர் இந்த கோரிக்கைகளை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன் வைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில், இஸ்லாமியருக்கும்,கிறித்தவர்களுக்கும் உள் ஒதுக்கீடு வழங்க முடிவெடுத்த்து. எனினும், இதை எதிர்த்து சிலர் உயர் நீதிமன்றம் சென்றனர். ஆனால் இந்த வழக்கு இன்னும் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றார் ஜவாஹிருல்லாஹ்.

தமிழக அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு மாறாக, மத்திய அரசு, உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர், அவசரம் அவசரமாக ஒரு அரசாணை மூலம் , இந்த உத்தரவைப் பிறப்பித்த்து. அதனிடம் தரவுகள் இருந்தும் அந்த்த் தரவுகளை அது பயன்படுத்தவில்லை.மேலும், இது குறித்து வழக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வந்த போது, விசாரணையில், மத்திய அரசு, தனது தரப்பு வாதத்தை சரியாக முன்வைக்கவில்லை என்று நீதிபதிகளே கூறியிருக்கின்றனர் என்றார் ஜவாஹிருல்லாஹ்.

இந்த நிலையில், மத்திய அரசு மேல் முறையீடு செய்வதை தாம் வரவேற்றாலும், இந்த இட ஒதுக்கீடு என்பது முஸ்லீம்களுக்கு போதுமானதாக இல்லை, ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தினாலேயே போதும், என்றார் ஜவாஹிருல்லாஹ்.

 

பிபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஆடியோ

 

Source: பிபிசி தமிழ்

Check Also

எரியூட்டப்படுவது மருத்துவரின் உடல் மட்டும் அல்ல சாதி என்னும் வேற்றுமைகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *