கடந்த 5.9.2011 அன்று நெல்லை ஏர்வாடி தமுமுக கிளை சார்பாக மாபெரும் இஸ்லாமிய மகளிர் மாநாடு கிளைத் தலைவர் கே. பக்ருதீன் அலி அஹமது தலைமையில் நடைபெற்றது. கிளை மகளிரணி செயலாளர் ஜனீனா, நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.
கிளை மகளிரணி துணைச் செயலாளர் பர்வீன் பாத்திமா, வரவேற்புரை நிகழ்த்தினார். மவ்லவி பிஸ்மில்லாகான் பைஜி ‘‘மறுமையில் பெண்களின் நிலை’’ என்ற தலைப்பிலும், அஜ்ஹரா ஆலிமா அவர்கள் “இல்லத்தரசிகளின் இனிய பண்புகள்” என்ற தலைப்பிலும், ஷபீனா ஆலிமா, ‘‘தியாகப் பெண்மணிகள்’’ என்ற தலைப்பிலும், ஏர்வாடி ஆலிமா பெண்கள் பல தலைப்புகளிலும், மதரஸா மாணவிகளும் உரை நிகழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டனர்.