Breaking News

ஆயுத இறக்குமதியில் இந்தியா முதலிடம்!

வளரும் நாடுகளில் ஆயுதங்கள் இறக்குமதியில்  இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு, இந்தியா 580 கோடி டாலர் மதிப்பிலான பல்வேறு ஆயுதங்களை வாங்கியுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தைவான் (270 கோடி டாலர்களுடன்) உள்ளது. சவுதி அரேபியா, பாகிஸ்தான் அடுத்த இடங்களில் உள்ளன. பெரும்பகுதி ஆயுதங்களை இந்தியா தொடர்ந்து ரஷியாவிடமிருந்துதான் வாங்கி வருகிறது. எனினும், இந்தியா இப்போது நவீன தொழில்நுட்பம் வாய்ந்த ஆயுதங்களை இஸ்ரேல், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து கொள்முதல் செய்கிறது. வளரும் நாடுகளுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதில் அமெரிக்கா முதலிடத்திலும், ரஷியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. ரஷியா 780 கோடி டாலர் மதிப்புள்ள ஆயுதங்களை வளரும் நாடுகளுக்கு விற்பனை செய்துள்ளது. 2010ம் ஆண்டில் மட்டும் 4,040 கோடி டாலர் மதிப்பிலான ஆயுதங்கள் விற்பனையாகின. 2009ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, 38.1 சதவீதம் அதிகம் ஆகும். 2003ம் ஆண்டில்தான் மிகக் குறைந்த அளவு ஆயுதங்கள் விற்பனையாகின.

தெற்காசிய பகுதியில் நவீன ஆயுதங்கள் விற்பனையில் ரஷியா முன்னிலை வகிப்பது அமெரிக்காவுக்கு கவலையளிப்பதாக உள்ளது. குறிப்பாக,பாகிஸ்தான்&இந்தியா இடையிலான மோதல் போக்குதான் அமெரிக்காவின் கவலைக்கு காரணமாக கூறப்படுகிறது.  உலக பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் நிலவி வந்த போதும், ஆசிய நாடுகளில் சில பெரிய அளவில் ஆயுதங்கள் கொள்முதல் செய்துள்ளன. குறிப்பாக சவுதி அரேபியாவும், ஆசியப் பகுதியில் இந்தியாவும் அண்மையில் அதிகளவில் ஆயுதங்களை வாங்கியுள்ளன. இவ்விரு நாடுகளின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதால் அவை ஆயுதக் குவிப்பில் ஈடுபட்டிருக்கலாம். ஆயுதப் போட்டியை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கையாக, இந்தியாவுக்கு ராணுவ ஒத்துழைப்பு அளிப்பதுடன் ஆயுதங்கள் விற்பனையை அமெரிக்கா அதிகரித்துள்ளது.  ஆனால், இந்தியா ஆயுதக் கொள்முதலை பரவலாக்கியுள்ளது. 2008ம் ஆண்டில், அமெரிக்காவிடமிருந்து, ஆறு சி13ஜே ரக சரக்கு விமானங்களை வாங்கி உள்ளது. 2010ம் ஆண்டில், 57 ஹாக் ஜெட் பயிற்சி விமானங்களை 100 கோடி டாலர் மதிப்பில் இங்கிலாந்திடமிருந்து வாங்கியுள்ளது. அதே ஆண்டு, 12 ஏடபிள்யு ஹெலிகாப்டர்களை இத்தாலியிடமிருந்து இந்தியா வாங்கியுள்ளது.

Check Also

தரங்கெட்ட பாஜகவும் அதன் ஆதரவாளர்களும் பங்கு கொள்ளும் தொலைக்காட்சி விவாதங்களை புறக்கணிப்போம்

என் உடன்பிறவா சகோதரி மீது கரு.நாகராஜன் நடத்திய வார்த்தை பயங்கரவாதம் ஆச்சரியத்திற்குரியது அல்ல புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் துயரம் பாஜகவிற்கு பொருட்டல்ல. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *