விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கடந்த 18.04.2010 அன்று பெண்கள் இஸ்திமா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரி. நாஜிமா பேகம் தலைமை வகித்தார். சகோதரி. மைதின் பேகம் பாத்திமிய்யா கிராஅத் ஓதி நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். சகோதரி. ரம்ஜான் பீவி பாத்திமிய்யா வரவேற்புரை நிகழ்த்தினார்.
சகோதரி. ஷபானா ஆலிமா (முதல்வர், ஆயிஷா சித்திகா மகளிர் கல்லூரி காயல்பட்டினம்) சிறப்புரையாற்றினார். சகோதரி ராபியா ரோஷன் (பேராசிரியை ஆயிஷா சித்திகா மகளிர் கல்லூரி காயல்பட்டினம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.