TMMK

இறைவனின் திருப்பெயரால்....

Friday
Aug 01st
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படுவது போல் மீனவர்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் சட்டமன்றத்தில் ஜவாஹிருல்லா எம்எல்ஏ கோரிக்கை

இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வெளியிடும் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை தொடர்பான விவாதத்தில் பங்குக் கொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பங்குக் கொண்டு மீனவர்கள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளை தீர்க்க கோரிக்கை வைத்தார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

கடந்த ஜனவரி 31 அன்று ராமேஸ்வரத்தில் மீனவர்களிடையே பேசிய இன்றைய வெளிவிவகாரத் துறை அமைச்சர் திருமதி சுஸ்மா சுவராஜ் பாஜக ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் பிரச்னைகள் தீரும் என்று பேசினார். மத்தியில் மீன் வளத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.. மீன் வளத்திற்கு தனி அமைச்சகம் அமைக்க பாஜக தயாராக இல்லை. மத்திய அரசு மீனவர்களுக்கு தனி வாரியம் கூட அமைக்காது என்று மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளது தேர்தல் வாக்குறுதிகள நிறைவேற்ற பாஜகவிற்கு அக்கறையில்லை என்பதை எடுத்துக் காட்டுகின்றது.

ரமலான் நோன்பு வைத்திருந்த ஊழியரைக் கட்டாயப்படுத்தி உணவருந்தச் செய்த சிவசேனா எம்.பி.யைக் கைது செய்ய வேண்டும்! தமுமுக வலியுறுத்தல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை:

டெல்லியில் உள்ள மகாராஷ்டிரா மாநில இல்லத்தில் உணவு வழங்கல் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் அர்ஷத் என்ற முஸ்லிம் சகோதரர் மீது சிவசேனா எம்.பி., காழ்ப்புணர்வுடன், வெறித்தனமாக நடந்துகொண்ட நிகழ்வு அதிர்ச்சி அளிக்கிறது.

சிவசேனா எம்.பி.யின் இந்த செயல் எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத காட்டுமிராண்டித்தனமானது; வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அனைத்து குடிமக்களுக்கும் முன்மாதிரியாகத் திகழவேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்விதம் வரம்பு மீறி நடந்துகொள்வது நாகரீக உலகில் இந்தியத் திருநாட்டின் பெருமையைக் குலைத்து விடக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

சம்பந்தப்பட்ட எம்.பி.யின் வரம்பு மீறிய செயல் வீடியோ ஆதாரங்களாக வெளிவந்திருக்கும் நிலையில், மத்திய அரசும், நாடாளுமன்ற சபாநாயகரும் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, குற்றமிழைத்த சிவசேனா எம்.பி.யைக் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது.

இவண்

(ஜே.எஸ்.ரிபாயீ)

தலைவர், தமுமுக

ஆளில்லாத ரயில்வே கிராசிங்குகளை உடனடியாக முறைப்படுத்த வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி வெளியிடும் பத்திரிகை அறிக்கை:

தெலங்கானாவில் இன்று, குழந்தைகளை ஏற்றிச்சென்ற வாகனத்தின் மீது ரயில் மோதிய கொடூர விபத்தில் 20க்கும் மேற்பட்ட...

அரசியலமைப்புச் சட்டம் தரும் உரிமையின் அடிப்படையில் தமிழகத்தில் மொழி சிறுபான்மையினரின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும்

பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி மானியக் கோரிக்கை விவாதத்தில் மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கடந்த ஜூலை 17 அன்'று கல்வி மற்றும் உயர் கல்வி மானியக் கோரிக்கையின் போது மனிதநேய...

புற்று நோய் தொடர்பாக சட்டமன்றத்தில் எழுப்பிய கேள்வி

மண்டபம் பாம்பன் தங்கச்சிமடம் மற்றும் பெரியப்பட்டணத்தில் புற்றுநோய்கு அரசு இலவச சிகிச்சை அளிக்குமா?

இராமநாதபுரம் எம்எல்ஏ ஜவாஹிருல்லா சட்டமன்றத்தில் கேள்வி

நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொட...

அச்சுந்தன் வயலிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கக்கூடிய வகையில் இராமநாதபுரத்திற்கு ஒரு புறவழிச் சாலை; அமைக்க சட்டமன்றத்தில் மமக வலியுறுத்தல்

அச்சுந்தன் வயலிலிருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கக்கூடிய வகையில் இராமநாதபுரத்திற்கு ஒரு புறவழிச் சாலை; அமைக்கப்படுமா என்று கடந்த 10. 07.2014 அன்று தமிழக சட்டமன்றத்தில் மமக சட்டமன்ற குழுத் தலைவரும்...

இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களில் 180 பாலஸ்தீனர்கள் படுகொலை! தமிழகம் முழுவதும் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல்களில் 180 பாலஸ்தீனர்கள் படுகொலை! தமிழகம் முழுவதும் தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்

பாலஸ்தீனத்தின் காஸா நகர் மீது கடந்த ஒரு வார காலமாக இஸ்ரேலிய பயங்கரவாத அரசு, ஏவுகணைகள் மூலம் தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட இதுவரை சுமார் 180 பாலஸ்தீனர...

 

31-07-2014 அன்று வேளாண்மைத் துறை மானியக் கோரியின் போது முனைவர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களின் கேள்வி

முனைவர்.எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

இராமநாதபுரம் மாவட்டம், ஓரியூரில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்னை அமைக்கப்படும் என்ற மாண்புமிகு அமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கு முதலில் ந...

30-07-2014 அன்று பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரியின் போது முனைவர்.எம்.எச். ஜவாஹிருல்லா அவர்களின் கேள்வி

முனைவர்.எம்.எச். ஜவாஹிருல்லா: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, ஒவ்வொரு மாவட்டத்திலும் இயங்கக்கூடிய முஸ்லிம் மகளிர் சங்கம் விதவைகள் உட்பட ஏழை எளிய முஸ்லிம் மகளிருக்கு பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி ...

More:

இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

இராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு சார்பில் மருத்துவ உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட தலைவர் எம்.சாதிக் பாட்சா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் வீரசிங்கிளிமடத்தை சேர்ந்த சகோதரருக்கு ரூ.5000 மும், ...

More:

தொண்டியில் நடந்தது என்ன?

இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் கடந்த 26.12.2013 அன்று ஒழுக்கம் இல்லாத தொண்டீஸ்வரன் என்ற இளைஞர் அப்பகுதி பெண்களை கிண்டல், கேலி செய்வதுமாக இருந்துள்ளார். அன்று மாலை சுமார் 6 மணியளவில் ஒரு வீட்டிற்கு ...

More:

ரமலான் நோன்பு வைத்திருந்த ஊழியரைக் கட்டாயப்படுத்தி உணவருந்தச் செய்த சிவசேனா எம்.பி.யைக் கைது செய்ய வேண்டும்! தமுமுக வலியுறுத்தல்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் வெளியிடும் கண்டன அறிக்கை:

டெல்லியில் உள்ள மகாராஷ்டிரா மாநில இல்லத்தில் உணவு வழங்கல் மேற்பார்வையாளராகப் பணியாற்றும் அர்ஷத் என்ற முஸ்...

More:

 


சவூதியில் வாழும் நம் இந்தியச் சமூகம் தங்களின் அவசர உதவிக்கு இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ள ( 24X7 HELP LINE: +966 1 4884697/4881982) எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

வேலை சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய புகார் தெரிவிக்க labour.riyadh@mea.gov.in என்ற மின் அஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.


இன்றைய செய்திகள்