TMMK

இறைவனின் திருப்பெயரால்....

Friday
Sep 10th
  • Login
  • Create an account
    Registration
    *
    *
    *
    *
    *
    Fields marked with an asterisk (*) are required.
  • Search
Home மதுக்கடை மறியல் ம.ம.க.வின் மதுக்கடை மறியல் போர் தமிழகம் & புதுச்சேரியில் பணிகள் தீவிரம்

ம.ம.க.வின் மதுக்கடை மறியல் போர் தமிழகம் & புதுச்சேரியில் பணிகள் தீவிரம்

E-mail Print PDF

 மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எதிர்வரும் மார்ச்&7 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் மதுக்கடை மறியல் போர் நடைபெறும் என கடந்த ஜனவரி 3, 2010 அன்று திருப்பூர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவிக்கப்பட்டது.
மெல்ல, மெல்ல, பணிகள் சூடுபிடித்து கடந்த ஒரு மாதமாக தமிழகம்,புதுச்சேரி மாநிலமெங்கும் சுவர் விளம்பர பணிகளும், டிஜிட்டல் விளம்பர, தட்டிகள் அமைக்கும் பணிகளும் முழு வீச்சில் தொடங்கப்பட்டன.

 


கடந்த இரண்டு வாரங்களாக ஆங்காங்கே பல்வேறு வகையான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டதால் மதுக்கடை மறியல் போர், மக்கள் மத்தியில் மாபெரும் விழிப்புணர்ச்சியையும், பேராதரவையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக ஒரு அரசியல் என்ற வகையில் கடந்த 20 ஆண்டுகளில் பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே மதுவுக்கும், மதுக்கடைகளுக்கும் எதிராக பரப்புரையையும், போராட்டங்களையும் நடத்தியது.

அதுவும் அக்கட்சியின் தலைவர்கள் மட்டத்தில் இருந்த கொள்கைப் பிடிப்பும், பிரச்சார உறுதியும் தொண்டர்கள் மட்டத்தில் இல்லாததால் டாக்டர். ராமதாஸின் முயற்சி பெரிய அளவில் வெற்றிப் பெறவில்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

ஆனால், மனிதநேய மக்கள் கட்சி முன்னெடுத்திருக்கும் மதுக்கடை மறியல் போர் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நல்லதொரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது பத்திரிக்கையாளர் வட்டத்தில் பேசப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் எந்த கருத்தை இக்கட்சி முன்வைக்கிறதோ, அக்கருத்தை பின்பற்றுவதில் அதன் தலைவர்களும், தொண்டர்களும் உறுதியாக இருக்கின்றனர். சொல்லும்&செயலும் ஒரே நேர் கோட்டில் இணைந்திருப்பதால், இவர்களால் இப்போராட்டத்தை விழி நடத்தவும், வெற்றி பெறவும் செய்ய முடியும் என எல்லோரும் நம்புகிறார்கள்.

அதனால் தான் இது குறித்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரங்களி¢ல் மக்கள் கூட்டம் பெருமளவில் கூடி, நமது போராட்டத்திற்கான காரணங்களை கூர்ந்து கவனிக்கிறார்கள். இது உளவுத்துறை அதிகாரிகளையே வியப்பில் ஆழ்த்தக் கூடியதாக இருக்கிறது.

குறிப்பிட்ட சமூக மக்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்க இருப்பதால் மமகவின் இளைஞர் அணி சார்பில் போராட்டத்தை வழி நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

கைது செய்யப்படும்போது பெண்கள் தங்குவதற்கு தனி மண்டபங்களும், தனி பகுதிகளும் தர வேண்டும் என காவல்துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அமைதியாக, அதே நேரம் உறுதியாக போராட்டம் நடைபெறும் என்பதால் மார்ச்-7, 2010 தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் பேரலையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

கலர் டி.வி கொடுத்து ‘ கவர்ச்சி’ அரசியல் நடத்துபவர்களுக்கு, மக்களை திரட்டி எச்சரிக்கை கொடுக்கும் மமகவின் போராட்டம், அரசியல் அதிர்ச்சியை கொடுக்கப்போகிறது.
Last Updated ( Wednesday, 03 March 2010 22:25 )  

Add comment


Security code
Refresh

ரமலான் வசந்தம்

Calendar

  • 2010 (429)
  • 2009 (183)
  • Google Groups

    tmmkonline

    Email Subscriptions

    J!Analytics